ஆரிய குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிடில் பாரிய நிர்வாக முடக்கல் போராட்டம் - யாழ் மாநகர சபையில் எச்சரிக்கை !

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான ஆரியகுளம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையேல் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் லோக தயாளன் சபையில் எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் நேற்றைய அமர்வில் ‘ஆரிய குளம் மாநகர சபைக்கு சொந்தமான சொத்து அடையளமாக காணப்படுகிறது.அந்தக் குளம் ஆக்கிரமிக்கப் படலாம் அல்லது கைவிட்டுப் போகலாம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றது. அதனை நாம் பாதுகாத்து மாநகர சபையின் ஆளுகைக்கு சொந்தமானது என்று அடையாளப்படுத்த வேண்டும்.

இனியும் குளத்தைப் பாதுகாக்க சபை நடவடிக்கை எடுக்கவிட்டால் நிர்வாகத்தை முடக்கி போராட வேண்டி வரும்’ என்று உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.குளத்தைப் பாதுக்காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் பதிலளித்தார்.