க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி !!!


கடந்த வருடம் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளன.

இதன்படி சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த பரீட்சையில் 656இ641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.