கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் “ஜீ பூம்பா” கைது

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கம்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை, மைத்திரிபோதிராஜ மாவத்தையை சேர்ந்த “ஜீ பூம்பா” என அழைக்கப்படும் மொஹமட் ஷியாம் என்பவரே இன்று அதிகாலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

33 வயதான குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.