இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கும் இனி விலை சூத்திரம் !

இறக்குமதி செய்யப்படும் பால் மா மீதான விலை சூத்திரம் ஒன்றினை நிர்ணயிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு தரமான பால் மாவினை வழங்கும் நோக்கில், இறக்குமதியப்படும் பால் மாவின் தரத்தை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவானது இந்த விலை நிர்ணய சூத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் தற்போதைய விலைகள் மற்றும் மாற்று விகிதங்களுக்கு ஏற்றதாய் அமையும்.

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை நிர்ணய சூத்திரம் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும்.