500 கோடி வைரம் கொள்ளை விவகாரம் - மேலும் ஒருவர் கைது!

500 கோடி பெறுமதியான வைரம் கொள்ளையடித்த கும்பலின் மேலும் ஒரு சந்தேக நபர் இன்று டெல்கந்த பகுதியில் வைத்து மிரிஹன சிறப்பு குற்றவியல் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவர் கங்கொடவில பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பென்கிரிவத்த சுத்தா என அழைக்கப்படும் சமில ரங்கன என போலீசார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை விசாரணையின் போது கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனம் பிலியந்தல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்தது.

சந்தேக நபர் நாளை (14) நுகேகொட நீதவான் முன்னிலையில் நிறுத்தப்படவுள்ளார்.

மிரிஹன பொலிஸ் தரப்பினர் இந்த விடயத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி அன்று பொலிஸ் சீருடைகள் மற்றும் சாதாரண ஆடை அணிந்த ஒரு குழு பன்னிப்பிட்டிய பகுதியியை சேர்ந்த தொழிலதிபரின் வீட்டினுள் நுளைந்து அவரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த 700 கோடி பெறுமதியான வைரம் மற்றும் ரத்தினங்களை கொள்ளை அடித்து சென்றனர்.

மேலும் தொழிலதிபரின் வீட்டில் வியாபாரம் மேற்கொள்ள வந்திருந்த ஒரு வெளிநாட்டவரை சந்தேக நபர்களால் கடத்தப்பட்டு மஹரகம பிரதேசத்தில் விட்டுவிட்டு சென்றிருந்தாக போலீசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.